சுப. வீரபாண்டியன் அல்லது சுபவீ என சுருக்கமாக அழைக்கப்படுபவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவராகத் தற்பொழுது பொறுப்பு வகிப்பவர் ஆவார். இவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர்; சொற்பொழிவாளர்; இதழாளர்; திராவிடத் தமிழ்த்தேசியர்; இறைமறுப்பாளர்; பெரியாரியலாளர்; அம்பேத்கர் பற்றாளர்; தமிழீழ ஆதரவாளர் ஆவார்.